/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
26ல் வாகன பேரணி தொழிற்சங்கம் முடிவு
/
26ல் வாகன பேரணி தொழிற்சங்கம் முடிவு
ADDED : ஜன 20, 2024 02:31 AM

திருப்பூர்;அனைத்து தொழிற்சங்கம் மற்றும் விவசாய கூட்டமைப்பின் கூட்டுக்குழு கூட்டம், திருப்பூர் ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொது செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். பனியன் சங்க பொது செயலாளர் சேகர், சி.ஐ.டி.யு., கட்டட சங்க மாநில செயலாளர் குமார், பனியன் சங்க செயலாளர் சம்பத், எல்.பி.எப்., மாவட்ட துணை தலைவர் ரங்கசாமி, சுகாதார சங்க செயலாளர் அறிவழகன்.
ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் பெருமாள், எச்.எம்.எஸ்., மாவட்ட செயலாளர் முத்துசாமி, துணை செயலாளர் ரகு, எம்.எல்.எப்., மாவட்ட செயலாளர் சம்பத், பனியன் சங்க செயலாளர் மனோகரன், விவசாய சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட விவசாய அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்றனர். அரசு கொள்கைகளை கண்டித்து, விவசாய கூட்டமைப்பு சார்பில், 26ம் தேதி, நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, மாவட்ட தலைநகரங்களில், வாகன பேரணி நடத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூரில், 26ம் தேதி காலை 10:00 மணிக்கு, காந்தி நகரில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, வாகன பேரணி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.