/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி கல்லுாரியில் ஓணம் கொண்டாட்டம்
/
ரேவதி கல்லுாரியில் ஓணம் கொண்டாட்டம்
ADDED : செப் 05, 2025 11:53 PM

திருப்பூர்:
திருப்பூர் ரேவதி கல்வி நிறுவனங்கள் சார்பில் ஓணம் கொண்டாட்டம், 'தகதோம் 2025' என்ற பெயரில் நடைபெற்றது.
விழாவல் மகாபலி மன்னர் அரங்கேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கேரளத்தின் பிரபல ஜெண்டை மேளத்துடன் நிகழ்ச்சிகள் நடந்தன.
கேரளத்தின் பாரம்பரிய உடை அணிந்து மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் சுந்தரிக்கு போட்டுடுதல், லெமன் அன் ஸ்பூன், ஓட்டப்பந்தயம், வடம் விழி போன்ற விளையாட்டுகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.
பிரபலமான பூ காவடி நடனத்தை மாணவியர் நடத்தினர். தொடர்ந்து ஓணம் விருந்து கல்லுாரி வளாகத்தில் நடந்தது. ஓணம் பண்டிகை, ஒற்றுமை, அன்பு மற்றும் மகிழ்ச்சியை கொண்டாடும் திருவிழா.
அவ்வகையில் ரேவதி கல்லுாரியில் இவ்விழா சிறப்பாக ஏற்பாடு செய்து அனைவரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.