நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: காங்கயம், திட்டுப்பாறையில் நேற்று முன்தினம் நெடுஞ்சாலை பணியில் தனியார் ரோடு கான்ட்ராக்ட் நிறுவனத்திற்கான லாரி ரோட்டின் ஓரம் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தது.
காங்கயத்தில் இருந்து சென்னிமலை நோக்கி அதிவேகமாக சென்ற லாரி மோதியதில், தண்ணீர் லாரி ரோட்டின் குறுக்கே விழுந்தது. அதில், இரண்டு வாகனத்தில் இருந்தவர்கள் காயமடைந்தனர்.
ரோட்டில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தர்மேந்தர், 37 என்பவர் தலையில் காயமடைந்து பரிதாபமாக இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.