/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடைக்குள் புகுந்த வேன் ஒருவர் பலி; 2 பேர் காயம்
/
கடைக்குள் புகுந்த வேன் ஒருவர் பலி; 2 பேர் காயம்
ADDED : மார் 15, 2025 11:43 PM

பல்லடம்: பல்லடம் அருகே கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில், ஒருவர் பலியானார். டிரைவர் உட்பட இருவர் படுகாயம் அடைந்தனர்.
கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் சமீர், 30; வேன் டிரைவர். நாகப்பட்டினத்தில் இருந்து மீன் எடுத்து வருவதற்காக, நேற்று காலை, கொச்சியில் இருந்து வேனில் புறப்பட்டார்.
பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டை நால்ரோடு சிக்னலை கடந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன், ரோட்டோரத்தில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
தொடர்ந்து, நின்றிருந்த ஆம்னி கார் மீது மோதிய பின், மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு, பாஸ்ட் புட் கடை ஒன்றில் மோதி நின்றது.
விபத்தில், காரணம்பேட்டையை சேர்ந்த வையாபுரி, 37 என்பவர் டூவீலருடன் துாக்கி எறியப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இதே பகுதியை சேர்ந்த ஜெயராமன்,35 மற்றும் விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் சமீர் ஆகியோர், காயங்களுடன் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தின் போது மின்கம்பம் உடைந்ததால் மின் கசிவும் ஏற்பட்டது. இதனால், மீட்புப் பணியில் இடையூறு ஏற்பட்டது.
மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், அகழ் இயந்திரத்தின் உதவியுடன், உடைந்த மின் கம்பம் அகற்றப்பட்டது.
விபத்துக்கு காரணம் டிரைவரின் அஜாக்கிரதையா, அல்லது வேனில் ஏதேனும் பழுது ஏற்பட்டதா என்பது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.