/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதியோர், குழந்தை இல்லங்கள் பதிவு செய்ய ஒரு மாதம் அவகாசம்
/
முதியோர், குழந்தை இல்லங்கள் பதிவு செய்ய ஒரு மாதம் அவகாசம்
முதியோர், குழந்தை இல்லங்கள் பதிவு செய்ய ஒரு மாதம் அவகாசம்
முதியோர், குழந்தை இல்லங்கள் பதிவு செய்ய ஒரு மாதம் அவகாசம்
ADDED : நவ 05, 2024 11:25 PM
திருப்பூர்; மாவட்டத்தில் செயல்படும் முதியோர், குழந்தைகள் இல்லங்கள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், முதியோர், மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லம், போதைக்கு அடிமையானோர் மறுவாழ்வு இல்லம், பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதிகள் பதிவு செய்யப்பட்டு செயல்படவேண்டும்.
பதிவு பெறாத இல்லங்கள், இணையதளம் மூலமாகவோ, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் மூலமாக பதிவுக்கு விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. குழந்தைகள் இல்லங்கள், https://dsdcpimms.tn.gov.in என்கிற இணையதளம் மூலமாக அல்லது குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் விண்ணப்பிக்கலாம்.
முதியோர் இல்லங்கள், https://www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in/ இணையதளம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.
போதைக்கு அடிமையானோர் மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் மனநலம் பாதித்தோருக்கான இல்லங்கள், https://tnhealth.tn.gov.in இணையதளம் அல்லது சென்னை மாநில மனநல ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், https://tnswp.com இணைய தளத்திலோ, மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.
காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்காத இல்லங்கள் சீல் வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.