/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்டத்தில் மேலும் ஒரு அரசு ஐ.டி.ஐ.,
/
மாவட்டத்தில் மேலும் ஒரு அரசு ஐ.டி.ஐ.,
ADDED : ஜூன் 23, 2025 05:35 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், உடுமலை, தாராபுரம் ஆகிய மூன்று இடங்களில் அரசு ஐ.டி.ஐ., உள்ளது. திருப்பூரில், 388, தாராபுரத்தில், 360, உடுமலையில், 228 என மொத்தம், 976 இடங்கள் உள்ளன. நடப்பாண்டில், 728க்கும் மேற்பட்டோர் இப்படிப்பில் இணைய ஆர்வம் காட்டி விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கு கவுன்சிலிங் முடிந்து, மீதமுள்ள இடங்களுக்கு நேரடி அட்மிஷன் நடந்து வருகிறது. மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாக உள்ள வெள்ளகோவில், முத்துார், மூலனுார் பகுதியில் இருந்து திருப்பூர் அல்லது தாராபுரம் ஐ.டி.ஐ.,க்கு வர வேண்டிய நிலை மாணவர்களுக்கு இருந்தது. சிரமங்களை கருத்தில் கொண்டு, காங்கயத்தில் ஐ.டி.ஐ., அமைக்க கடந்த பட்ஜெட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டிலேயே ஐ.டி.ஐ., படிப்புகள், நான்கு பாடப்பிரிவுகளுடன் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் எளிதில் வந்து செல்ல ஏதுவாக பஸ் ஸ்டாண்ட், கரூர் மெயின் ரோடு, கோவை செல்லும் வழி உள்ளிட்ட இடங்களில் தற்காலிக இடம் தேடும் பணி துவங்கியுள்ளது. காங்கேயம் அடுத்த காடையூர் பகுதியில் புதிய ஐ.டி.ஐ., அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.