/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஒரே நாடு; ஒரே கார்டு' திட்டம்: ரேஷன் ஊழியருக்கு பணிச்சுமை
/
'ஒரே நாடு; ஒரே கார்டு' திட்டம்: ரேஷன் ஊழியருக்கு பணிச்சுமை
'ஒரே நாடு; ஒரே கார்டு' திட்டம்: ரேஷன் ஊழியருக்கு பணிச்சுமை
'ஒரே நாடு; ஒரே கார்டு' திட்டம்: ரேஷன் ஊழியருக்கு பணிச்சுமை
ADDED : ஜன 21, 2025 07:16 AM
திருப்பூர்; ''அரசின் சிறப்பு திட்டம், 'ஒரே நாடு, ஒரே கார்டு திட்டம்' போன்றவற்றால் பணிப்பளு அதிகரித்துள்ளது. இதற்காக ஊக்கத் தொகை வழங்க வேண்டும்'' என, ரேஷன் கடை பணியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
'ஒரே நாடு, ஒரே கார்டு' என்ற திட்டத்தால், ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பணிப் பளு ஏற்பட்டுள்ளது.
இதனை எதிர்கொள்ளும் வகையில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவிக்கும் சிறப்பு திட்டங்களை மேற்கொள்ள கால நிர்ணயம் செய்யக் கூடாது; சிறப்பு திட்டங்கள் அறிவிக்கும் போது, பணியாளர்களுக்கு கார்டுக்கு, 50 காசு என்ற பயன்பாட்டில் இல்லாத தொகையை வழங்காமல் குறைந்தபட்சம், 5 ரூபாய் வழங்க வேண்டும்.
ரேஷன் கடை பணியாளர்களுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். பல்வேறு துறைகள் அதிகாரம் செலுத்துவதன் காரணமாக ஊழியர்களுக்கு கடும் மன உளைச்சல் ஏற்படுகிறது. ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் பி.எப்., தொகை உரிய துறையில் செலுத்தப்பட வேண்டும். எட்டாவது ஊதியக் குழுவில் எங்களை இணைக்க வேண்டும்.
பொது நிலைத் திறன் அடிப்படையில் பணி உயர்வு, மாறுதல் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளோம். எங்கள் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

