/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பக்தி நெறியுடன் ஆரோக்கியமும் பேண வேண்டும்'
/
'பக்தி நெறியுடன் ஆரோக்கியமும் பேண வேண்டும்'
ADDED : ஜூன் 09, 2025 11:38 PM

திருப்பூர்; ''பக்தி நெறியுடன் வாழ்ந்து, உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்'' என, பக்தி இசை பாடகர் வீரமணி ராஜூ கூறினார்.
வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவையொட்டி, திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் வளாகத்தில், மாலையில், இன்னிசை, பட்டிமன்றம், பரதம், பாட்டு என, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம், பிரபல பக்தி இசை பாடகர் வீரமணி ராஜூ, அபிேஷக் ராஜூ ஆகியோரின் பக்தி பாடல் இசை நிகழ்ச்சி நடந்தது. விநாயகர், முருகர், பெருமாள், ஐயப்பன், அம்மன் மற்றும் சிவனை புகழ்ந்து பாடும் பாடல்களை இன்னிசையுடன், தனது கணீர் குரலில் பாடினர். பாடலுக்குரிய விளக்கத்தையும் வழங்கினார்.
அவர் பேசுகையில், ''கோவிலுக்கு சென்றால் கவலை, துன்பம் மறையும். பகவான் நாமத்தை பாடினாலே, பல்வேறு வியாதிகள் மறைந்துவிடும். இறை பாடல் மற்றும் பதிகங்களை, உண்மையான பக்தியுடன் பாடினாலே போதும். முனிவர்கள், ரிஷிகள் பாடிய பாடல்களை பாடும் போது, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற தொந்தரவுகள் வராது. பணம் சம்பாதிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், பக்தி நெறியுடன் வாழ்ந்து, உடல் ஆரோக்கியம் பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.