ADDED : மே 04, 2025 01:19 AM
ஊட்டி:நீலகிரியில் கோடை விழா துவங்கி உள்ளதால், ஊட்டி சென்று திரும்ப ஒருவழி பாதை திட்டம் அமலாகி உள்ளது.
நீலகிரி மாவட்ட கோடை விழாவின் துவக்கமாக, நேற்று கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி துவங்கியது.
அடுத்ததாக, மே 9 முதல் 11ம் தேதி வரை கூடலூரில் 11வது வாசனை திரவிய காட்சி, ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 10 முதல் 12ம் தேதி வரை, 20வது ரோஜா கண்காட்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர் கண்காட்சி மே 16 முதல் 21ம் தேதி வரை ஆறு நாட்கள் நடக்கின்றன.
மே 23 முதல் 25ம் தேதி வரை குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 65-வது பழக்கண்காட்சி நடக்கிறது.
குன்னுார் காட்டேரி பூங்காவில் முதல் முறையாக மலைப்பயிர்கள் காட்சி மே 31 மற்றும் ஜூன் 1ம் தேதி நடக்கிறது.
நீலகிரி எஸ்.பி., நிஷா கூறியதாவது:
கோடை விழாவையொட்டி, மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரும் வாகனங்கள் பர்லியார் வழியாகவும், ஊட்டியிலிருந்து செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் வகையில் ஒரு வழிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை மே இறுதி வரை தொடரும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

