தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வெங்காய அறுவடை தீவிரம்

 வெங்காய அறுவடை தீவிரம்

 வெங்காய அறுவடை தீவிரம்


ADDED : மார் 14, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொங்கலுார்: சின்ன வெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வெயில் காலம் என்பதால் நீண்ட நாட்களுக்கு அவற்றை சேமித்து வைக்க முடியாது. எனவே அறுவடை செய்த வெங்காயத்தை உடனடியாக விற்பனை செய்வதை தவிர விவசாயிகளுக்கு வேறு வழி இல்லை.

இந்த சீசனில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இதுவே விலை வீழ்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. தற்போது முதல் தர சின்ன வெங்காயம், 35 ரூபாய்க்கும், உள்ளூர் சந்தையில் விற்பனையாகும் வெங்காயம் கிலோ, 27 ரூபாய்க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

சின்ன வெங்காயத்திற்கு மிக குறைந்த விலையே கிடைப்பதால் போட்ட கொள்முதலை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், 'இந்த ஆண்டு போதிய மழை இன்றி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், இரண்டு மாதத்தில் அறுவடைக்கு வரும் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்தோம். ஒரே பயிரை பலரும் சாகுபடி செய்ததால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us