ADDED : செப் 18, 2026 06:57 AM
திருப்பூர்:தொடர்
மழை, வானிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், இம்மாத தொடக்கத்தில்
பெரிய வெங்காயத்தின் வரத்து சற்று பாதிக்கப்பட்டது. தற்போது, நடப்பு
வாரத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இதனால் வரத்து ஓரளவு
சீராகியுள்ளது. ஆனால், திருப்பூர் உழவர் சந்தையில் கிலோ 55- ரூபாய்,
வெளிமார்க்கெட்டில் 65 ரூபாய்-க்கும் விற்பனை செய்யப்பட்டு
வருகிறது.
மொத்த வியாபாரிகள் விலையை குறைக்காமல் விற்பனை
செய்வதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட
நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை
அதிகாரிகள் நடைமுறை சிக்கல்களை களைந்து, குடோன்களில் கள ஆய்வு நடத்த
வேண்டும். பெரிய வெங்காயத்துக்கு செயற்கை தட்டுப்பாடு
ஏற்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மக்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்தில், ரேஷன் கடைகளில் பெரிய
வெங்காயம் கிலோ ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில்,
திருப்பூரில் விலை குறையாமல் உள்ளது.
