/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆன்லைன் மோசடி; கேரளாவில் 3 பேர் 'வளைப்பு'
/
ஆன்லைன் மோசடி; கேரளாவில் 3 பேர் 'வளைப்பு'
ADDED : அக் 19, 2024 12:39 AM
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவரிடம் ரூ.5 லட்சம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது வாட்ஸ் ஆப் செயலியில், வந்த ஒரு இணைப்பில், கூகுள் மேப் ரிவியூ ஜாப் என்பதில் இணைந்து முதலீடு செய்தால் ஏராளமாக பணம் வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் அவர் முதல் கட்டமாக முதலீடு செய்து பணம் பெற்றார். மேலும் அடுத்த நிலைக்குச் செல்ல டெலிகிராம் செயலியில் வந்த இணைப்பில் 5 லட்சம் ரூபாய் செலுத்தினார். அதன் பின் எந்த பணமும் வரவில்லை. அவர் செலுத்திய பணமும் பறிபோனது.
திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பல் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருப்பது தெரிந்தது.
அங்கு சென்ற போலீசார் சித்திக்குள் அக்பர், 21; மிதுன் மோகனன், 27, உமர் ஜமால், 29 ஆகியோரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.