/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இணையதளம் வாயிலாக 'நீட்' தேர்வுக்குப் பயிற்சி
/
இணையதளம் வாயிலாக 'நீட்' தேர்வுக்குப் பயிற்சி
ADDED : ஏப் 26, 2025 11:36 PM

திருப்பூர்: 'நீட்' தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பயிற்சி வகுப்புகள் படிக்கும் நேரம் போக மீதமுள்ள நேரத்தில் ஆன்லைன், மொபைல் போன் ஆப் வாயிலாகவும் தேர்வுக்கு தயாராகலாம்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப்படிப்புக்கான 'நீட்' தேர்வு, மே மாதம், 4ம் தேதி நாடு முழுதும் நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் தயாராக திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் பயிற்சி மையம் உருவாக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேர்வுக்கு ஒரு வாரமே உள்ளதால், கிடைக்கும் நேரத்தில் பயிற்சி எடுத்துக் கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட 'நீட்' தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது: இணையதளம் வாயிலாக, 'நீட்' தேர்வுக்கு இலவச பயிற்சி, மாதிரி தேர்வுகளை எழுதும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் வழியில் தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு 'TNSED Manarkeni' மணற்கேணி (உயர் கல்வி வழிகாட்டி) மொபைல் போன் ஆப், 'நீட்' தேர்வுக்கு தேவையான தகவல்களை வழங்குகிறது.
திரும்ப, திரும்ப கேட்கப்படும் பகுதி எவை, எந்தெந்த வடிவில் கேள்வி இருக்கும், வினாத்தாள் மாதிரி, மதிப்பெண் கணக்கீடு உள்ளிட்ட விபரங்களும் இதில் இருக்கும்.  73734 48484 என்ற எண்ணில் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

