/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆன்லைனில் எஸ்.ஐ.ஆர். படிவம் பதிவு செய்யும் பணிகள் வேகம்
/
ஆன்லைனில் எஸ்.ஐ.ஆர். படிவம் பதிவு செய்யும் பணிகள் வேகம்
ஆன்லைனில் எஸ்.ஐ.ஆர். படிவம் பதிவு செய்யும் பணிகள் வேகம்
ஆன்லைனில் எஸ்.ஐ.ஆர். படிவம் பதிவு செய்யும் பணிகள் வேகம்
ADDED : நவ 20, 2025 02:58 AM
திருப்பூர்: மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட பூர்த்தி செய்த தீவிர திருத்த படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி துவங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகளில் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர் உள்ளனர். இவர்களுக்கு வீடு தேடிச்சென்று படிவம் வழங்குவது மற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்ப பெறும் பணிகளில், 2,536 பி.எல்.ஓ.,க்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்களில் சுய விவரங்கள் மற்றும் 2002 பட்டியலில் இடம்பெற்ற விவரங்களை பூர்த்தி செய்து, பி.எல்.ஓ.,க்களிடம் ஒப்படைக்க துவங்கியுள்ளனர்.
இதனால், வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் பூர்த்தி செய்த படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள், மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும் தற்போது துவங்கியுள்ளன. தொகுதிக்கு ஒருவர் வீதம் எட்டு வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும், 27 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 266 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள் மற்றும் பி.எல்.ஓ.,க்கள், தீவிர திருத்த படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் பிரிவினர் மட்டுமின்றி, வருவாய்த்துறை, கூட்டுறவு, ஊராட்சி செயலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள், வேளாண், தோட்டக்கலைத்துறையினர் என, ஒட்டுமொத்த அரசு துறையினரும் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளுக்கு திருப்பப்பட்டுள்ளனர்.
வரும் டிச. 4ம் தேதிக்குள், வாக்காளர்களிடமிருந்து எஸ்.ஐ.ஆர். படிவங்களை பெற்று, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும், தேர்தல் கமிஷன் நிர்ணயித்தபடி, டிச. 9ல் தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும்வகையில் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

