/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேரோட்டத்திற்கு யானை மட்டுமே பயன்படுத்தணும்; ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

ADDED : ஏப் 02, 2025 07:51 PM
உடுமலை; உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவங்கியுள்ளது.
திருவிழாவிற்காக, கம்பம் போடுவதற்கு முன், பொள்ளாச்சி ரோட்டிலுள்ள, மையத்தடுப்புகள், தெரு விளக்குகளை அகற்றி, தேரோடும் வீதிகளை புதுப்பிக்க வேண்டும்.
அதிகமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் வகையில், வடக்கயிற்றின் நீளத்தை அதிகரிக்க வேண்டும்.
திருத்தேரோட்டத்தின் போது, பாரம்பரிய முறைப்படி, கஜ முகனான, யானையை மட்டுமே கொண்டு, தேரை நகர்த்தவும், திருப்பவும், நிலை நிறுத்தவும் வேண்டும். தேரோட்டத்தில் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது.
தேரோட்டத்தின் போது, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குட்டைத்திடலில் கலை நிகழ்ச்சிகள், பொழுது போக்கு அம்சங்கள், திருவிழா கடைகளுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என ஹிந்து முன்னணி சார்பில், அதன் நிர்வாகிகள், உடுமலை கோட்டாட்சியர், தாசில்தார், நகராட்சி கமிஷனர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.