/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.எம்.சி., மருத்துவமனையின் விரிவுபடுத்தப்பட்ட பிரிவு திறப்பு
/
ஏ.எம்.சி., மருத்துவமனையின் விரிவுபடுத்தப்பட்ட பிரிவு திறப்பு
ஏ.எம்.சி., மருத்துவமனையின் விரிவுபடுத்தப்பட்ட பிரிவு திறப்பு
ஏ.எம்.சி., மருத்துவமனையின் விரிவுபடுத்தப்பட்ட பிரிவு திறப்பு
ADDED : அக் 13, 2024 11:25 PM

திருப்பூர்: திருப்பூர், ஏ.எம்.சி., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின், 'ஏ.எம்.சி., டவர் -2' விரிவுபடுத்தப்பட்ட பிரிவு துவக்க விழா நேற்று நடந்தது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, பல்லடம் ரோட்டில், ஏ.எம்.சி., மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. அவசர சிகிச்சை உட்பட அனைத்து வகை வசதிகளுடன், மருத்துவ மனை இயங்கி வருகிறது.
'ஏ.எம்.சி., டவர் -2' என்ற, விரிவுபடுத்தப்பட்ட பிரிவு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. டயாலிசிஸ் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, ஸ்கேன், வெளிநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட வசதிகளுடன், புதிய பிரிவு துவங்கப்பட்டுள்ளது. அதன் துவக்க விழா நேற்று நடந்தது.
மருத்துவமனை சேர்மன் டாக்டர் பிரபு சங்கர், நிர்வாக இயக்குனர் ஜீவநந்தினி வரவேற்றனர். அமைச்சர் சாமிநாதன், விரிவுபடுத்தப்பட்ட பிரிவை துவக்கி வைத்தார்.
அமைச்சர் சாமிநாதன், சேர்மன் பிரபு சங்கர், ஜீவநந்தினி, அவர்களது குழந்தைகள் அன்யா பிரபு, அத்யா பிரபு, அக் ஷிவ் பிரபு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
'டயாலிசிஸ்' பிரிவை, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் திறந்து வைத்தார். ஸ்கேன் பிரிவை மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்தார். விழாவில், நான்காவது மண்டல தலைவர் பத்மநாபன், எம்.ஜி.பி., நிறுவன நிர்வாக இயக்குனர் பாலன் - அன்னபூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய டயாலிசிஸ் பிரிவு, உலகத்தரத்துடன், ஆர்.ஓ., வாட்டர் பிளான்டுடன், 'ஜெர்மன்' தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் நீண்ட கால ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவன காப்பீட்டில், சிறப்பான சிகிச்சை பெற்று பயன்பெறலாம் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.