/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒருங்கிணைந்த 'சிசிடிவி' கண்காணிப்பு அறை திறப்பு
/
ஒருங்கிணைந்த 'சிசிடிவி' கண்காணிப்பு அறை திறப்பு
ADDED : ஜன 08, 2025 12:20 AM
பல்லடம்; பல்லடம் அருகே, ஒருங்கிணைந்த 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.
பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 90க்கும் மேற்பட்ட இடங்களில் 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இப்பகுதியில் அதிகப்படியான திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதை தொடர்ந்து, அதிகப்படியான குற்றச்சம்பவங்களில் விசாரணை எளிதானது. மேலும், குற்றச்சம்பவங்களும் படிப்படியாக குறைந்தன.
இதற்கிடையே, 91 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்களின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நடந்தது.
பல்லடம் டி.எஸ்.பி., சுரேஷ் தலைமைவகுத்து கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். செம்மிபாளையம் ஊராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.