/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பாதம் பாதுகாப்போம்' மருத்துவ மையம் திறப்பு
/
'பாதம் பாதுகாப்போம்' மருத்துவ மையம் திறப்பு
ADDED : மார் 15, 2025 11:59 PM

அவிநாசி: 'பாதம் பாதுகாக்கும் திட்டத்தின்' கீழ், அவிநாசி அரசு மருத்துவமனையில் இதற்காக பாத மருத்துவ மையம் என தனி பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
அவிநாசி அரசு பொது மருத்துவமனையில் கால் பாதங்களில் வெடிப்பு, புண், ஆறாத வடுக்கள், கால் வீக்கம் மற்றும் சர்க்கரை அளவு காரணமாக விரல்கள் மற்றும் பாதங்களில் ஏற்படும் புண் காரணமாக சிகிச்சை எடுக்க நாள்தோறும் 15-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
இது குறித்து டாக்டர் பாலாஜி கூறுகையில், ''55 வயதுக்கு மேற்பட்டோர், சர்க்கரை நோய் உள்ளவர்கள், பாதங்களில் வெடிப்பு, கவனிக்காத நாள்பட்ட புண்கள், ஆறாத வடுக்கள் என பாதங்களில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த பிரிவு செயல்பட உள்ளது.
உடல் உறுப்புகளில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய பாதங்களை, பரிசோதனை செய்து முறையாக சிகிச்சை பெற்று பராமரிக்க முடியும். தினமும், 10 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறோம்,'' என்றார்.