/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை திருப்பதி கோவிலில் 30ல் பரமபத வாசல் திறப்பு
/
உடுமலை திருப்பதி கோவிலில் 30ல் பரமபத வாசல் திறப்பு
உடுமலை திருப்பதி கோவிலில் 30ல் பரமபத வாசல் திறப்பு
உடுமலை திருப்பதி கோவிலில் 30ல் பரமபத வாசல் திறப்பு
ADDED : டிச 25, 2025 06:11 AM
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, வரும் 30ம் தேதி பரமபதவாசல் திறப்பு நடக்கிறது.
கோவிலில், பகல் பத்து உற்சவம் கடந்த 20ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் 29ம் தேதி வரை பகல் பத்து உற்சவங்கள் நடக்கிறது. வரும் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, காலை, 5:00 மணிக்கு கோவிலில் பரமபத வாசல் திறப்பு நடக்கிறது. அன்று மாலை, 5:30 மணிக்கு ராப்பத்து உற்சவம் துவங்குகிறது.வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, வரும் 29ம் தேதி மாலை, 5:30 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு, 7:00 மணிக்கு நாமசங்கீர்த்தனம், பஜனை உள்ளிட்ட பக்தி நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடைபெற உள்ளது.