/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிளை கால்வாயில் தண்ணீர் திறப்பு
/
கிளை கால்வாயில் தண்ணீர் திறப்பு
ADDED : ஜூலை 30, 2025 08:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; புதுப்பாளையம் கிளை கால்வாயில், நான்காம் மண்டல பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த, 27ல், பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது பிரதான கால்வாயில் இருந்து கிளை கால்வாய்களில் தண்ணீர் திறந்து, பாசன காலம் துவங்கியுள்ளது. பிரதான கால்வாய் பூசாரிபட்டி ஷட்டரில் இருந்து, நேற்று காலை புதுப்பாளையம் கிளை கால்வாயில், தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கால்வாய் வாயிலாக, 7,310 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பாசன சபை தலைவர்கள் விஜயமோகன், சுரேஷ்குமார், நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.