/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறைச்சி நிறுவனத்துக்கு எதிர்ப்பு
/
இறைச்சி நிறுவனத்துக்கு எதிர்ப்பு
ADDED : பிப் 17, 2024 01:39 AM
திருப்பூர்,:காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நேற்று தலைவர் மகேஷ்குமார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஜீவிதா ஜவஹர் முன்னிலை வகித்தார். இதில், சிவன்மலை ஊராட்சிப் பகுதியில் கோழி இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனம் கட்டப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிறுவனத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதியினர் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிர்வாகத்தில், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது அமைந்தால் கடுமையான ஈ தொல்லை ஏற்படும். சுவாசக் கோளாறு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும், என இதற்கு அனுமதி தரக் கூடாது என தெரிவித்து வருகின்றனர்.
அக்கோரிக்கையை ஏற்று அந்நிறுவனத்துக்கு ஊராட்சி ஒன்றியம் அனுமதி வழங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட 26 தீர்மானங்கள் விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்டது.
பி.டி.ஓ., விமலா தேவி, ஒன்றியக் கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.