ADDED : ஏப் 27, 2026 09:15 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் கடந்த 16-ம் தேதியுடன் முடிவடைந்தன. மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை வரும் வரும் 30-ம் தேதிக்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அந்த அறிக்கையை வட்டாரக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பணிகள் அனைத்தும் ஏப்ரல் இறுதிக்குள் நிறைவடைந்ததும், மே முதல் வாரத்தில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மே இரண்டாவது வாரத்தில் இருந்து 2026--27- புதிய கல்வியாண்டு பணிகள் தொடங்க உள்ளன.
