ADDED : பிப் 20, 2026 04:32 AM
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று ஊரக வளர்ச்சி துறை சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் நிலவரம், திட்டமிடப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் மலர்விழி முன்னிலை வகித்தார்.
இதில், மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடந்து வரும் வீடு கட்டும் திட்டம், வீடுகள் பழுது பார்ப்பு திட்டம், மக்கள் பிரதிநிதிகள் தொகுதி வளர்ச்சி திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், புதிதாக மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகளுக்கான திட்ட அறிக்கைகள் விரைந்து தயார்படுத்தவும், நடந்துவரும் பணிகளை விரைந்துமுடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டது.
