ADDED : மார் 22, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
உடுமலை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள், போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள், தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட, போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க வேண்டும்.
அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத முகவர்களிடம், ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்று, அவற்றை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் உடனடியாக வழங்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் படைக்கலன் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என, திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
