தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குட்டீஸ் கணக்கெடுக்க உத்தரவு

 குட்டீஸ் கணக்கெடுக்க உத்தரவு

 குட்டீஸ் கணக்கெடுக்க உத்தரவு


ADDED : ஜூன் 29, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 11:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த முகாமில், 1 லட்சத்து 94 ஆயிரத்து 636 குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1 லட்சத்து 81 ஆயிரத்து 452 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு வரும் ஜூலை 3க்-குள் சொட்டு மருந்து கிடைக்கச் செய்ய வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கிராம மற்றும் நகர்நல மையச் செவிலியர்கள் அடங்கிய சுகாதாரக் குழுவினர் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். குழந்தையின் சுண்டு விரலில் மை உள்ளதா எனப் பார்த்து, சொட்டு மருந்து குடித்திருந்தால் கதவில் 'P' (பிரசண்ட்) என்றும், வெளியூர் சென்றிருந்தால் 'X' (ஆப்சென்ட்) என்றும் எழுதி வருகின்றனர்.

அடுத்தடுத்த நாட்களில் வரும் குழுக்கள், அந்த விடுபட்ட குழந்தைகளுக்குக் கைவசம் உள்ள சொட்டு மருந்தை வழங்கி, விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வர் எனச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us