ADDED : டிச 21, 2025 03:29 AM

திருப்பூர் மாநகராட்சி குப்பை விவகாரம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் நடந்த விசாரணையில், மாநகராட்சி தேர்வு செய்த இடத்தின் ஒரு பகுதியில் மட்டும் குப்பையை கொட்ட அனுமதி வழங்கப்பட்டது. குப்பைகளை முறையாக பேக்கிங் செய்து எடுத்து செல்வதுடன், தரம் பிரித்து கொட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், மாநகராட்சி நிர்வாகம் இதை முறையாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுடன், பொதுமக்கள் மேல்முறையீடு செய்தனர்.
போராட்ட குழுவினர் கூறுகையில், 'குப்பை விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு விசாரணையில் ஆஜரான மாநகராட்சி நிர்வாகம், நாங்கள், குப்பையை தரம் பிரித்து கொட்டவில்லை. ஆனால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறியது.
'இதை ஏற்காத ஐகோர்ட், தரம் பிரித்தால் மட்டுமே சின்னக்காளிபாளையத்தில் குப்பையை கொட்ட வேண்டும்' என உத்தரவிட்டு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

