/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை வேளாண் சந்தை அவிநாசியில் திறப்பு
/
இயற்கை வேளாண் சந்தை அவிநாசியில் திறப்பு
ADDED : மே 23, 2025 12:37 AM

அவிநாசி, : அவிநாசி, மங்கலம் ரோட்டில் சி.சி.எம் ஷோரூம் வளாகத்தில், இயற்கை காய்கறி சந்தை திறப்பு விழா நடைபெற்றது.
இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிகள், பயிறு வகைகள் உள்ளிட்ட பல்வேறு இயற்கை விளை பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கவும், இயற்கை உழவர்களை ஊக்கப்படுத்தவும்,நஞ்சில்லா காய்கறிகளை சந்தைப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை வளரும் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் விதமாக இயற்கை வேளாண் சந்தை அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சி.சி.எம்., ஷோரூம் வளாகத்தில் நேற்று திறக்கப்பட்டது. இந்த சந்தையில், வாரந்தோறும் வியாழக்கிழமை, மாலை, 4:00 முதல், 7:00 மணி வரை வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.