/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி
/
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி
ADDED : நவ 12, 2025 11:14 PM

உடுமலை: காங்கயம் மற்றும் படியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மானுப்பட்டியில், இயற்கை வேளாண்மை குறித்த ஒரு நாள் களப்பயிற்சி பெற்றனர்.
காங்கயம் வட்டார வேளாண் விரிவாக்க மையம், 'அட்மா' திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில், காங்கயம் மற்றும் படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், வேளாண் அறிவியல் பயிலும் மாணவர்கள், உடுமலை மானுப்பட்டிக்கு களப்பயிற்சியாக அழைத்து வரப்பட்டனர்.
மானுப்பட்டியிலுள்ள அகரம் வேளாண் ஆராய்ச்சி நிலைய அறக்கட்டளை வளாகத்தில், இந்த பயிற்சி வழங்கப்பட்டது.
ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாக இயக்குனர் பாலகுமார் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், இயற்கை வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
காங்கயம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தாமணி, பள்ளி ஆசிரியர்கள் குணசேகரன், சுகுணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

