/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடக்கழிவு மேலாண்மைக்கு தனி அமைச்சகம்; முதல்வரிடம் வலியுறுத்த அமைப்பினர் வேண்டுகோள்
/
திடக்கழிவு மேலாண்மைக்கு தனி அமைச்சகம்; முதல்வரிடம் வலியுறுத்த அமைப்பினர் வேண்டுகோள்
திடக்கழிவு மேலாண்மைக்கு தனி அமைச்சகம்; முதல்வரிடம் வலியுறுத்த அமைப்பினர் வேண்டுகோள்
திடக்கழிவு மேலாண்மைக்கு தனி அமைச்சகம்; முதல்வரிடம் வலியுறுத்த அமைப்பினர் வேண்டுகோள்
ADDED : ஜூலை 21, 2025 11:26 PM

திருப்பூர்; 'தொழில் வளர்ச்சியில் புரட்சி...' என்ற எதிர்கால திட்டமிடலுடன், வளர்ந்து வரும் நகரங்களின் வரிசையில் முன்னணியில் பயணிக்கிறது திருப்பூர். ஆனால், சுகாதாரம் சார்ந்த விஷயத்தில். அடிப்படை கட்டமைப்பு கூட இல்லாததால் மிரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கிட்டத்தட்ட, 16 லட்சம் மக்கள் சார்ந்திருக்க கூடிய திருப்பூர் மாநகராட்சி, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சார்ந்திருக்க கூடிய ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது, திடக்கழிவு மேலாண்மை பணி.
பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியேறும் குப்பைகளை மேலாண்மை செய்ய முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
அரசின் கவனம்திரும்புமா! இப்பிரச்னை ஏற்படுத்தும் விபரீதத்தை பல்வேறு தன்னார்வ அமைப்பினர் உணரத் துவங்கியுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்; சுற்றுச்சூழல் மேம்பாட்டில் தமிழகம் முன்னணி மாநிலமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக வைத்து, திடக்கழிவு மேலாண்மை பணியில் ஈடுபட்டு வரும் 'துப்புரவாளன்' அமைப்பினர், தமிழக அரசின் நேரடி கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அமைப்பைச் சேர்ந்த பத்மநாபன், மோகன்குமார், சந்தோஷ், தங்கராஜ் ஆகியோர், தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாநில செயலர் கார்த்திகேய சிவசேனாபதியை சந்தித்து மனு வழங்கினர்.
மாநிலத்தில், அனைத்து துறைகளுக்கும் தனி துறை இயங்குவது போன்று, திடக்கழிவு மேலாண்மைக்கும் தனி அமைச்சகம் ஏற்படுத்தி, செயலர் பதவி உருவாக்கி, மருத்துவத்துறை போன்று, அத்தியாவசிய துறைகளின் பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும்.
குப்பை உருவாவதை எந்தெந்த வழியில் குறைக்க முடியும் என்பதையறிந்து, நடைமுறைப்படுத்த வேண்டும். மக்காத குப்கைளை மறுசுழற்சி செய்வதற்குரிய கட்டமைப்பை, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் நிறுவ வேண்டும். பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து குப்பைகளை பெற கட்டணம் வசூலிக்க வேண்டும்.
தொழில் வாய்ப்புகிராம மற்றும் நகர அளவில், குப்பைகளை சேகரிப்பது, மக்கும் குப்பையில் இயற்கை உரம் தயாரிப்பது; மக்காத குப்பையை மறு சுழற்சிக்கு அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்ள முன்வரும் தனியாருக்கு, மானிய உதவியை அரசு வழங்க வேண்டும்.
இதன் வாயிலாக, அவர்கள் குறு, சிறு தொழில் முனைவோராக உருவாவதுடன், திடக்கழிவு மேலாண்மை திட்டம் வெற்றி பெறுவதோடு, வேலை வாய்ப்பும் பெருகும்.
மாநில அளவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செம்மையாக செயல்படுத்தும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, ஆண்டுதோறும் சிறப்பு ஊக்க நிதி வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
காலநிலை மாற்றத்துக்கும்
குப்பையே காரணம்!
தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாநில செயலர் கார்த்திகேய சிவசேனாபதி கூறுகையில், ''தற்போது காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை இல்லாதது. எனவே, இப்பிரச்னையை தமிழக அரசு, துறை அமைச்சர்கள், காலநிலை மாற்றம் தொடர்பான துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, திடக்கழிவு மேலாண்மை திட்டம் வெற்றி பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.