/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உலக முதலீட்டாளர்கள் மாநாடு; மாணவர்கள் காண ஏற்பாடு
/
உலக முதலீட்டாளர்கள் மாநாடு; மாணவர்கள் காண ஏற்பாடு
ADDED : ஜன 08, 2024 12:09 AM
உடுமலை;சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, காணொலி வாயிலாக கண்டறியும் வகையில், பள்ளி மற்றும் கல்லுாரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
சென்னையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று துவங்கிய நிலையில் இன்றும் நடத்தப்படுகிறது. இம்மாநாட்டில், கண்காட்சி, கருத்தரங்கம், வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், தொழில் வளர்ச்சி, தொழில் நுட்பம், பொருளாதார வளர்ச்சி நிகழ்வுகளை மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், காணொலி வாயிலாக காணலாம்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அறை எண் 238ல் தொழில் முனைவோர், தொழில் சங்க பிரதிநிதிகள் காணொலி வாயிலாக காண, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, உடுமலை அரசு தொழில் பயிற்சி நிறுவனம் ஆகிய இடங்களில், காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சிகளை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அறிக்கையில் உள்ளது.