ADDED : ஏப் 11, 2026 05:55 AM

அ நிறம் | அளவு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், உப்பு சர்க்கரை கரைசல் (ஓ.ஆர்.எஸ்., இருக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தால், உடலில் நீர்ச்சத்து குறைந்து, திடீர் மயக்கம், தள்ளாட்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஓ.ஆர்.எஸ்., பாக்கெட்டுகளை, ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நேற்று நடந்தது. ஒரு ஓட்டுச்சாவடிக்கு, ஐந்து என்ற வகையில் கணக்கிட்டு, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், ஓ.ஆர்.எஸ்., பாக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மண்டலம் வாரியாகவும் கூடுதல் இருப்பு வைக்கவும், மண்டல தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
