/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி மெடிக்கல் சென்டரில் எலும்பு மருத்துவ ஆலோசனை
/
ரேவதி மெடிக்கல் சென்டரில் எலும்பு மருத்துவ ஆலோசனை
ADDED : செப் 20, 2024 05:37 AM
திருப்பூர் : ரேவதி மெடிக்கல் சென்டரில் வரும், 21, 22 ஆகிய தேதிகளில், எலும்பு மூட்டு, விளையாட்டு காயங்கள் மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் நடைபெறுகிறது.
இதில், எலும்பு மற்றும் மூட்டு மாற்று, தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் சபரிநாதன் பங்கேற்று, எலும்பு கனிம அடர்த்தி பரிசோதனை, உடல் பருமன் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை, சிபிசி., யூரிக் ஆசிட், ஆர்.ஏ., பேக்டர் பரிசோதனைகள், பிஸியோதெரபி மற்றும் உணவியல் நிபுணரின் ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது.
முகாமில், பரிந்துரை செய்யப்படும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன்களுக்கு கட்டண சலுகையாக, 3,000 ரூபாய், சி.டி., ஸ்கேன்களுக்கு, 1,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முகாம் குறித்து, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:
பனியன் தொழிலாளர்கள், கை, கால்களுக்கு அதிக சுமை தரும் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவதால் சாதாரணமாகவே தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, மூட்டு பகுதிகளில் வலி ஏற்படும். நாளடைவில் முதுகு தண்டுவடம், மூட்டுகளில் பிரச்னைகளை தரும்.
இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு ரேவதி மெடிக்கல் சென்டர் இம்முகாமை ஏற்பாடு செய்துள்ளது. 200 ரூபாய் மட்டும் பதிவுக்கட்டணமாக செலுத்தி, பல்வேறு பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். பங்கேற்க விரும்புவோர், 98422 09999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.