/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு பஸ்களில் கூட்டம் அதிகரிப்பு
/
சிறப்பு பஸ்களில் கூட்டம் அதிகரிப்பு
ADDED : நவ 03, 2024 11:14 PM

திருப்பூர்; தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திருப்பூர் திரும்ப வசதியாக நவ., 1 முதல் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் கூட்டம் இல்லாத நிலையில், மாலையில் சிறப்பு பஸ்கள் குறைக்கப்பட்டது.
நேற்று காலையிலும் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. மதியத்துக்கு பின் சற்று அதிகரித்தது; மாலையில் மிகவும் அதிகரித்தது. பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுவதால், பெரும்பாலானோர் நேற்று மதியத்துக்கு பின் புறப்பட்டு, நேற்று மாலை, இரவு திருப்பூர் வரும் வகையில் பஸ்களில் வந்தனர். மாலையில் இருந்து இரவு வரை பஸ்களில் கூட்டம் அதிகரித்தது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூரை பொறுத்த வரை தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்ற வேகத்தில் திரும்ப மாட்டார்கள். பண்டிகைக்கு முந்தைய ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக பஸ் ஏறினார்கள். ஆனால், நடப்பு வாரம் வெள்ளிக்கிழமை வரை மெதுவாக தான் வந்து சேருவர்.
சீரான இடைவெளியில், பயணிகள் வருகை புரிவதால், இன்று இரவு வரை சிறப்பு பஸ் இயக்கம் இருக்கும். அதன் பின் நிறுத்தப்பட்டு விடும். வழக்கமான பஸ்கள் பயணிகள் வந்து சேர போதுமானதாக இருக்கும்,' என்றனர்.