/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தபால் அலுவலகத்தில் தலைக்கு மேல் ஆபத்து
/
தபால் அலுவலகத்தில் தலைக்கு மேல் ஆபத்து
ADDED : நவ 06, 2025 04:53 AM

பல்லடம்: காமநாயக்கன்பாளையம் பகுதியில், கிளை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தபால் அலுவலக கட்டடம், மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
அலுவலகத்துக்கு நுழையும் பகுதியில் உள்ள மேற்கூைரயின் சில பகுதிகள் ஏற்கனவே பெயர்ந்து விழுந்துள்ளன. தற்போது, எஞ்சியுள்ள பகுதிகளில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததுடன், கம்பிகள் வெளியே தெரிகின்றன.
மேற்கூரையின் ஒரு பகுதி விழுவதற்கு தயாராக விரிசலுடன் காத்திருக்கிறது. தபால் ஊழியர்கள் உட்பட, நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வரும், இந்த தபால் அலுவலகத்தின் பழுதடைந்த மேற்கூரையால், தலைக்கு மேல் ஆபத்து காத்திருக்கிறது.
வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள உள்ள நிலையில், ஆபத்து அதிகம் உள்ளது. எனவே, உடனடியாக, மாற்று கட்டடத்துக்கு அலுவலகத்தை மாற்ற தபால் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

