/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்னல்களில் தலைக்கு மேல் ஆபத்து; யார் அந்த மேலிடம்? விளக்கம் கேட்கும் சமூக ஆர்வலர்
/
சிக்னல்களில் தலைக்கு மேல் ஆபத்து; யார் அந்த மேலிடம்? விளக்கம் கேட்கும் சமூக ஆர்வலர்
சிக்னல்களில் தலைக்கு மேல் ஆபத்து; யார் அந்த மேலிடம்? விளக்கம் கேட்கும் சமூக ஆர்வலர்
சிக்னல்களில் தலைக்கு மேல் ஆபத்து; யார் அந்த மேலிடம்? விளக்கம் கேட்கும் சமூக ஆர்வலர்
ADDED : ஜூலை 28, 2025 10:21 PM

திருப்பூர்; 'போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர போர்டுகள் வைக்க, லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும் யார் அந்த மேலிடம்' என கேள்வி எழுப்பும் மெகா பேனரை, கழுத்தில் அணிந்தபடி, சமூக ஆர்வலர் சரவணன், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார்.
அதன்பின், அவர் கூறிய தாவது: திருப்பூர் நகர பகுதி சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில், விதிமுறைகளை மீறி, விளம்பர போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிக்னலிலும், மொபைல் எண்ணை குறிப்பிட்டு, 'இந்த எண்ணில் தொடர்புகொண்டால் சிக்னலில் விளம்பரம் வைக்கப்படும்,' என, விளம்பரம் வைத்துள்ளனர். சிக்னல்களில் விளம்பரம் செய்து, பெருந்தொகை வசூலித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, மாநகராட்சி, காவல் துறை, சாலை போக்குவரத்து துறைகளில், கடந்த இரண்டு ஆண்டுகளாக 40 க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. சிக்னல்களில் இதுவரை விளம்பரம் செய்ததன்மூலம் வசூலிக்கப்பட்ட தொகையை, அரசு திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும். நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள விளம்பர போர்டுகளுக்கு, மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் பணம் வசூலிக்கும் அந்த மேலிடம் யார்? சிக்னலில் யார்வேண்டுமானாலும் விளம்பர போர்டு வைக்கலாமா.
அனைத்து சிக்னல் களிலும், தலைக்கு மேல் ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருக்கும் விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டும், என்றார்.
சமூக ஆர்வலரின் இந்த மனுவால், போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர போர்டுகள் தொங்க விடுவதற்கு அனுமதி அளிப்பது யார், அதற்காக எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறது, யார் யாருக்கு அந்த தொகை பகிரப்படுகிறது என்கிற பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

