/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
/
ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
ADDED : ஜன 22, 2024 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;திருப்பூர் அருகேயுள்ள முத்தணம்பாளையத்தில் உள்ள ஆக்ஸ்போர்டு மாடர்ன் மெட்ரிக் பள்ளியின், 28வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளியின் நிறுவனர் சாவித்திரி தேவி, தலைமை வகித்தார். பள்ளி தாளாளர்கள் கதிரவன், நவநீதமுத்து, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுபாஷிணி, வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். டாக்டர்கள் ராஜம்மாள், கோபாலகிருஷ்ணன், லதா, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். விழா முடிவில், பள்ளி மாணவ, மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.