/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெயின்டர் கொலை; ஒடிசா வாலிபர் கைது
/
பெயின்டர் கொலை; ஒடிசா வாலிபர் கைது
ADDED : ஜன 24, 2025 03:34 AM

அவிநாசி; நீலகிரி மாவட்டம், பந்தலுாரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 54. பெயின்டர் வேலைக்கு சென்று வந்தார். பனியன் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சோன் லால் ராணா, 28, அவரது நண்பர் ஜெய்நாத் 26, ஆகியோர், 20ம் தேதி இரவு ஜெய்நாத், அதீத போதையில், அவிநாசி சந்தைப்பேட்டை வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது, பாலசுப்ரமணியன், தன் நண்பர்களுடன் அவிநாசி - சந்தைப்பேட்டையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அங்கு சென்ற ஜெய்நாத், தீப்பெட்டி கேட்டார். தர மறுத்ததால், மொபைல் போன்களை துாக்கிக்கொண்டு தனது அறைக்குச் சென்றார். உடனே, பின்தொடர்ந்து சென்ற பாலசுப்பிரமணியன், மொபைல்போனை தருமாறு கேட்டதில், இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, போன்களை எடுத்து சென்று, பாலசுப்பிரமணியன் சந்தைப்பேட்டையில் உள்ள கடை முன் துாங்கினர். வேலை முடிந்து வந்த சோன் லால் ராணாவிடம், நடந்ததை ஜெய்நாத் கூறி உள்ளார். உடனே இருவரும் சென்று துாங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியனை கட்டையால் தாக்கினர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார். அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து சோன் லால் ராணாவை கைது செய்து, தலைமறைவாக உள்ள ஜெய்நாத் உட்பட 2 பேரை தேடி வருகின்றனர்.