ADDED : ஏப் 22, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:கரூர் - திருச்சி ரயில் வழித்தடத்தில் தண்டவாளப் பராமரிப்பு, பொறியியல் பணி நடக்கிறது. இதனால், பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் (எண்:16844) வரும், 25, 29 மற்றும் 30ம் தேதி குளித்தலை ஸ்டேஷனில் நிறுத்தப்படும்; பணி முடிந்த பின், குளித்தலையில் இருந்து திருச்சிக்கு இந்த ரயில் தாமதமாக இயங்கும்.
திருச்சி - பாலக்காடு டவுன் ரயில் (எண்:16843) வரும், 25 மற்றும் 29ம் தேதி, பெருகாமணி ரயில்வே ஸ்டேஷனிலும், 30 ம் தேதி எலமனுார் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும். பணி முடிந்த பின் பெருகமணியில் இருந்து வழக்கமாகன ஸ்டேஷன்களில் நின்று பாலக்காடு டவுன் செல்லும். பணியால் ரயில் தாமதமாகும்.
