/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மீண்டும் பழனிசாமி முதல்வராவார்'
/
'மீண்டும் பழனிசாமி முதல்வராவார்'
ADDED : நவ 18, 2024 06:42 AM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார் பில், கட்சியின் 53ம் ஆண்டு தொடக்க விழா பொது கூட்டம் பெருமாநல்லுாரில் நடந்தது. எம்.எல்.ஏ., விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் சாமிநாதன், வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், ''2026ல் பழனிசாமி மீண்டும் முதல்வராவார். கட்டி முடிக்கப்பட்ட கோபுரமாக அ.தி.மு.க., என்றும் உயர்ந்து நிற்கும். அ.தி.மு.க., பயணம் வெற்றிப்பயணமாக இருக்கும்'' என்றார்.
முன்னதாக மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், பேசுகையில், ''எம்.ஜி.ஆர்., ஆட்சியை ஜெயலலிதா கொண்டு வந்தார். ஜெ., ஆட்சியை பழனிசாமி கொண்டு வந்தார். பழனிசாமி, 1,650 கோடியில் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தைக் கொண்டு வந்தார்.
ஆயிரத்து, 450 கோடியில் திருப்பூருக்கு நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. மருத்துவக்கல்லுாரி அமைந்தது. அ.தி.மு.க.,வின் ஒரு கிளை செயலாளராக இருந்த பழனிசாமி இன்று பொது செயலாளராக உயர்ந்து உள்ளார்.
ஏர் ஓட்டும் விவசாயி மீண்டும் முதல்வராக வர வேண்டும்'' என்றார். எம்.எல்.ஏ., ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.