/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் -- மங்கலம் ரோட்டில் வாகன நெரிசல் அதிகரிப்பு!
/
பல்லடம் -- மங்கலம் ரோட்டில் வாகன நெரிசல் அதிகரிப்பு!
பல்லடம் -- மங்கலம் ரோட்டில் வாகன நெரிசல் அதிகரிப்பு!
பல்லடம் -- மங்கலம் ரோட்டில் வாகன நெரிசல் அதிகரிப்பு!
ADDED : நவ 05, 2024 11:53 PM

பல்லடம்: மங்கலம் ரோட்டில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
பல்லடம்- - மங்கலம் ரோடு, அவிநாசி வழியே கொச்சின் - கோவை -- -சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலை என்பதால்,இவ்வழியாக ஏராளமான சரக்கு வாகனங்கள், கன்டெய்னர்கள், டிப்பர் லாரிகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
மேலும், மங்கலம் ரோட்டில், கோர்ட், பத்திர அலுவலகம், கிளைச் சிறை, அரசு பள்ளி கல்லுாரி உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலக கட்டடங்கள் உள்ளன.
இதனால், மங்கலம் ரோடு, எந்நேரமும் வாகன போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படுகிறது. ஏற்கனவே, குறுகலாக காணப்பட்ட மங்கலம் ரோடு, பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின், கடந்த, 2018ல் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்த ரோட்டில் தற்போது மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. அதிகப்படியான கனரக வாகனங்கள் வந்து செல்லும் இந்த ரோட்டில், பள்ளி கல்லுாரி செல்லும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் நடந்து செல்கின்றனர்.
அதிகளவில் வாகனங்கள் செல்வதால், அடிக்கடி இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.