/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் அதிகம்
/
பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் அதிகம்
பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் அதிகம்
பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் அதிகம்
ADDED : டிச 20, 2025 09:07 AM

திருப்பூர்: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி கணக்கீடுக்குப் பின், நேற்று மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், பல்லடம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தொகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பல்லடம் பல்லடம் தொகுதியில், 4 லட்சத்து 19 ஆயிரத்து 197 வாக்காளர் இருந்த நிலையில், 57,781 ஆண்; 55,100 பெண்; 26 திருநங்கை என, 1 லட்சத்து 12 ஆயிரத்து 907 பேர் (27 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர்; வரைவு பட்டியலில், 1 லட்சத்து 48 ஆயிரத்து 511 ஆண்; 1 லட்சத்து 57 ஆயிரத்து 748 பெண்; 31 திருநங்கை என, மொத்தம் 3 லட்சத்து 6 ஆயிரத்து 290 வாக்காளர் உள்ளனர்.
திருப்பூர் வடக்கு திருப்பூர் வடக்கு தொகுதியில், 4 லட்சத்து 7 ஆயிரத்து 72 வாக்காளர் இருந்த நிலையில், 58,754 ஆண்; 52,252 பெண்; 55 திருநங்கை என, 1 லட்சத்து 11 ஆயிரத்து 61 பேர் (27.3 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர்; வரைவு பட்டியலில், 1 லட்சத்து 45 ஆயிரத்து 628 ஆண்; 1 லட்சத்து 50 ஆயிரத்து 263 பெண்; 120 திருநங்கை என, மொத்தம் 2 லட்சத்து 96 ஆயிரத்து 11 வாக்காளர் உள்ளனர்.
திருப்பூர் தெற்கு திருப்பூர் தெற்கு தொகுதியில், 2 லட்சத்து 72 ஆயிரத்து 295 வாக்காளர் இருந்த நிலையில், 45,115 ஆண்; 41,888 பெண்; 8 திருநங்கை என, 87 ஆயிரத்து 13 பேர் (32 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர்; வரைவு பட்டியலில், 90 ஆயிரத்து 697 ஆண்; 94 ஆயிரத்து 561 பெண்; 24 திருநங்கை என, மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 282 வாக்காளர் உள்ளனர்.
காங்கயம் காங்கயத்தில், 2 லட்சத்து 67 ஆயிரத்து 926 வாக்காளர் இருந்த நிலையில், 28,460 ஆண்; 28,987 பெண்; 13 திருநங்கை என, 57 ஆயிரத்து 460 பேர் (21.5 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர்; வரைவு பட்டியலில், 1 லட்சத்து 1,013 ஆண்; 1 லட்சத்து 9 ஆயிரத்து 442 பெண்; 11 திருநங்கை என, மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 466 வாக்காளர் உள்ளனர்.
அவிநாசி அவிநாசியில், 2 லட்சத்து 96 ஆயிரத்து 817 வாக்காளர் இருந்த நிலையில், 28,100 ஆண்; 27,975 பெண் என, 56 ஆயிரத்து 75 பேர் (18.9 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர்; வரைவு பட்டியலில், 1 லட்சத்து 15 ஆயிரத்து 394 ஆண்; 1 லட்சத்து 25 ஆயிரத்து 338 பெண்; திருநங்கை 10 என, மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 742 வாக்காளர்உள்ளனர்.
உடுமலை உடுமலை தொகுதியில், 2 லட்சத்து 72 ஆயிரத்து 14 வாக்காளர் இருந்த நிலையில், 24,855 ஆண்; 26,836 பெண்; திருநங்கை 9 பேர் என, 51 ஆயிரத்து 700 பேர் (19.1 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில், 1 லட்சத்து 5 ஆயிரத்து 368 ஆண்; 1 லட்சத்து 14 ஆயிரத்து 926 பெண்; திருநங்கை 23 என, மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 317 வாக்காளர்உள்ளனர்.
தாராபுரம் தாராபுரம் தொகுதியில், 2 லட்சத்து 66 ஆயிரத்து 127 வாக்காளர் இருந்த நிலையில், 24,862 ஆண்; 26,104 பெண்; திருநங்கை 3 பேர் என, 50 ஆயிரத்து 969 பேர் (19.15 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில், 1 லட்சத்து 3 ஆயிரத்து 700 ஆண்; 1 லட்சத்து 11 ஆயிரத்து 451 பெண்; திருநங்கை 7 என, மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 158 வாக்காளர் உள்ளனர்.
மடத்துக்குளம் மடத்துக்குளத்தில், 2 லட்சத்து 43 ஆயிரத்து 478 வாக்காளர் இருந்த நிலையில், 18,487 ஆண்; 18,113 பெண் என, 36 ஆயிரத்து 600 பேர் (15 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில், 99 ஆயிரத்து 772 ஆண்; 1 லட்சத்து 7,088 பெண்; திருநங்கை 18 என, மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 878 வாக்காளர் உள்ளனர்.

