/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லாங்குழி சாலை; தொடர் விபத்து
/
பல்லாங்குழி சாலை; தொடர் விபத்து
ADDED : நவ 18, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ், மாநகராட்சி கமிஷனரிடம் அளித்த மனு:
சிறுபூலுவபட்டி, அமர்ஜோதி கார்டன் முதல் அணைப்பாளையம் மேம்பாலம் வரை தனியார் நிறுவனம் காஸ் குழாய் பதிக்க பிரதான சாலையில் குழி தோண்டப்பட்டது. பணி முடிந்ததும் தோண்டப்பட்ட குழி மூடப்பட்டு கான்கிரீட் பேட்ஜ் போடப்பட்டது. கான்கிரீட் பேட்ஜ் சரி வர போடப்படாததால், 40 அடி சாலை 15 அடி சாலையாக காட்சியளிக்கிறது. சாலையில், ஆர்.டி.ஓ., அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், அரசு பள்ளி ஆகியவை உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குண்டும் குழியுமாக உள்ள ரோட்டில் தினமும் விபத்து நடக்கிறது. ரோட்டைப் புதுப்பிக்க வேண்டும்.