ADDED : செப் 04, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பனை விதைகள் மற்றும் பழ மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
வரும் 6ம் தேதி சொக்கனுார் ஊராட்சி பகுதியில் பனை விதைகள் மற்றும் பழ வகைச் செடிகள் நடுவது; வரும் 11ம் தேதி, பெருமாநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட வலசுபாளையம், பனங்காடு மற்றும் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குட்டைகளில் பனை விதைகள், பழ மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்யப்பட்டது. அமைப்பினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
