/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனை மரம் ஏறும் இயந்திரம் கண்டுபிடிப்போருக்கு விருது
/
பனை மரம் ஏறும் இயந்திரம் கண்டுபிடிப்போருக்கு விருது
பனை மரம் ஏறும் இயந்திரம் கண்டுபிடிப்போருக்கு விருது
பனை மரம் ஏறும் இயந்திரம் கண்டுபிடிப்போருக்கு விருது
ADDED : மார் 10, 2024 12:35 AM
திருப்பூர்;சிறந்த முறையில், பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்போருக்கு, தோட்டக்கலைத்துறை சார்பில் விருது வழங்கப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை :
பனை மர சாகுபடி மற்றும் பனை மர சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்குதல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை ஏறும் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்குதல் போன்ற இனங்களுக்கு மாநில அளவில் 146 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது.
பனை மரத்தில், ஆபத்தின்றி, எளிதாக மரத்தில் ஏறுவதற்கான கருவிகளை கண்டு பிடிக்கும் பல்கலை கழகம், தனியார் நிறுவனங்கள் மற்றும் முற்போக்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த பனை ஏறும் இயந்திரம் அல்லது கருவி கண்டுபிடிப்போருக்கு, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பவர்கள், தோட்டக்கலை துறையால் தேர்வு செய்யப்படுவர்.
பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பவர்கள், www.tnhorticulture.gov.in என்ற இணைய தளம் வாயிலாக, வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

