/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனராஸ் சிறப்பு ரயில் 16ம் தேதி இயக்கம்
/
பனராஸ் சிறப்பு ரயில் 16ம் தேதி இயக்கம்
ADDED : பிப் 08, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக, வரும், 16ம் தேதி கோவை - பனராஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும், 16ம் தேதி, காலை 6:35 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஸ்டேஷன்களில் நின்று, வடமாநிலங்கள் வழியாக பயணித்து, உ.பி., மாநிலம், பனராஸ் ஸ்டேஷனுக்கு, 18ம் தேதி காலை, 7:25 மணிக்கு சென்று சேரும்.
மறுமார்க்கமாக, 22ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு பனராஸில் புறப்பட்டு, 24ம் தேதி காலை, 9:30 மணிக்கு கோவை வந்து சேரும்.
சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளதாக, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.