/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடையிலும் ஆர்ப்பரித்து கொட்டும் பஞ்சலிங்க அருவி
/
கோடையிலும் ஆர்ப்பரித்து கொட்டும் பஞ்சலிங்க அருவி
ADDED : மார் 24, 2025 11:13 PM

உடுமலை; கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும், திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணியர் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, மலைமேல் பஞ்சலிங்க சுவாமி கோவில், பஞ்சலிங்க அருவி மற்றும் மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை என, சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது.
தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும், மலைமேலுள்ள, பஞ்சலிங்க அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணியர் திருமூர்த்திமலைக்கு வந்து, மலைமேலிருந்து விழும், மூலிகை குணங்களுடன் கூடிய குளிர்ந்த நீரில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வரும் நிலையில், விடுமுறை நாட்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து, அருவியில் குளித்து வருகின்றனர்.