ADDED : மே 29, 2026 05:03 AM

அ நிறம் | அளவு
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா நடந்து வருகிறது. அதில், ஐந்தாவது நாளான நேற்று,63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியளித்தனர்.
அவ்வகையில், சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், மயில்வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமண்யர், மூஞ்சூறு வாகனத்தில் விநாயக பெருமான், ரிஷப வாகனத்தில் விசாலாட்சி அம்மன்மற்றும் சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய அற்புத காட்சி.
