ADDED : மார் 14, 2026 06:07 AM

அ நிறம் | அளவு
பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், தெற்கு அவிநாசி பாளையம் ஊராட்சி, கொடுவாய் வேகமாக வளர்த்து வரும் நகராக உள்ளது. இங்கு குப்பை பிரச்னைக்கு பஞ்சமே இல்லை. எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் மலைகளாக காட்சியளிக்கிறது.
குப்பை கொட்ட இட வசதி கிடையாது. இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை கிடக்கும் இடங்களில் ஆங்காங்கே தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதிலிருந்து கிளம்பும் நச்சுப் புகை குடியிருப்புகள், வணிக வளாகங்களை சூழ்ந்து கொள்கிறது. இது பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
பொதுமக்கள் கூறுகையில், ''மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தீ வைத்தால் கூட பிரச்னை இருக்காது. நெரிசல் மிகுந்த இடங்களில் கூட தீ வைத்து எரிக்கப்படுவதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும்'' என்றனர்.
