/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சியுடன் இணைக்க ஊராட்சி மக்கள் எதிர்ப்பு
/
நகராட்சியுடன் இணைக்க ஊராட்சி மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 29, 2024 12:11 AM
பல்லடம்:பல்லடம் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
பல்லடம் நகராட்சியை, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வடுகபாளையம்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட சில வார்டு பகுதிகள், நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகவலை தொடர்ந்து, வடக்கு பாளையம் புதுார் கிராம மக்கள், நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர்.
இதன்படி, நகராட்சியுடன் ஊராட்சி இணைக்கப்பட்டால், ஊராட்சியில் நடந்து வரும் பிரதான பணிகளான தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 15வது மத்திய மாநில நிதி குழு மானியம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்த இயலாத நிலை ஏற்படும்.
இப்பகுதியில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெரும்பாலான மக்கள் தேசிய வேலை உறுதி திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர். நகராட்சியுடன் இப்பகுதியை இணைப்பதால், ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.