/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சி செயலர்கள் இடமாற்றம் திடீர் ரத்து
/
ஊராட்சி செயலர்கள் இடமாற்றம் திடீர் ரத்து
ADDED : மே 14, 2025 11:27 PM
பல்லடம்; பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 20 ஊராட்சிகளில், கணபதிபாளையம், புளியம்பட்டி, வடுகபாளையம் புதுார், சித்தம்பலம், கரடிவாவி, பருவாய், மாணிக்காபுரம் ஆகிய ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து, பி.டி.ஓ., கனகராஜ் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர், நேற்று முன் தினம், பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி செயலர்கள் பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்யும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு வரை காத்திருப்புப் போராட்டம் நீடித்த நிலையில், பி.டி.ஓ., கனகராஜ், பணியிட மாற்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக கூறினார். இதனையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.